Friday 27 September 2013

ஒரினச்சேர்க்கை...குடும்பத்திற்கு ஒவ்வாத சேர்க்கை......!

அழுது கொண்டிருந்த அந்த தோழியை என்னால் சமாதானப் படுத்தவே முடியல…சிறிது நேரம் கழித்து அவரே கண்களைத்துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

என் கணவரும்,கணவரின் நண்பரும் சின்ன வயதிலிருந்தே நட்பாக இருந்து இருக்கிறார்கள்.ஒரு காலகட்டத்தில் இருவரும் அன்யோன்யமாக வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள்.என் கணவர் சென்னையில் இருந்தாலும்,அவரின் நண்பர் திருச்சியில் இருந்தாலும் வாரத்திற்கு ஒருமுறை என் கணவரைத்தேடி வந்துவிடுவார்.

அந்த நண்பருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது.இருந்தும் இந்த நட்பு இன்னும் கொஞ்சம் ஆழமாக வளர்ந்து கொண்டு இருப்பது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

இருவரும் ஒன்றாக ஒரு போர்வைக்குள் படுத்து இருந்ததை என்னால் தாங்க முடியல.அதுவும் திருமணம் ஆகி கொஞ்சநாளில் என்னை ரூமில் படுக்க வைத்துவிட்டு இப்படி நண்பருடன் படுக்கும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது என்ற பல யோசனைகளில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

மாடிப்படியில் உட்கார்ந்து கொண்டு அழது கொண்டிருந்த என்னை என் கணவர் தேடி வந்தார்.ஏன் இங்க உட்கார்ந்துட்டு இருக்க என்றதும்,எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.நீங்க உங்க நண்பருடன் பழகுங்க.அதுக்காக அவருடன் படுக்கவும்,அவர் சொல்வதைத்தான் வேதவாக்காக நம்புவதும் எனக்கு வேதனையா இருக்குங்க.நான் உங்களை மட்டுமே முழுமையாக நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனா உங்களுடைய இந்த ஆழ்ந்த நட்பு எனக்கு ஒருவித அச்சத்தை உண்டாக்குகிறது.என்று கூறிவிட்டு கணவரை தள்ளிவிட்டு உள் ரூமில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.

திரும்ப வந்த கணவர்,என்னை மன்னித்துவிடு,இனிமேல் இப்படி நடக்காது என்றார்.இதுதான் நான் கடைசியாக பண்ணிய தப்பாக இருக்கும் என்று என் தலையில் அடித்து சத்தியம் செய்து கொடுத்தார்.
நானும் நம் குடும்பவாழ்க்கை,அம்மா,அப்பாவுக்கு தெரிந்தால் தவறாகிவிடும் என்பதை எண்ணி மறந்து மன்னித்து வாழ்ந்து வருகிறேன்.ஆனால் அந்த நண்பர் வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறார்.

என் கணவரை இரவு நேரத்தில் கதவு தட்டி எழுப்பும் போது,நான் எழுந்து தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்.உங்கள் நட்பு எந்த அளவு தவறாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உணருங்கள் என்று கூறி கதவை அடைத்துவிட்டேன்.

அதன் பிறகு இரண்டு மாதம் எங்கள் வீட்டிற்கு வரவேயில்லை.
என்னங்க ஆச்சு உங்க நண்பருக்கு,ஆளைக்காணோம்,போனில் பேசுகிறாரா எனக்கேட்டேன்.இல்லை அவனுக்கு சென்ற மாதம் ஆக்ஸிடெண்ட் ஆகி ஹோமாவில் கிடந்து இப்போது தான் வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.நாமும் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவோம் என்றார்.நானும் சரி என்று தலையாட்டினேன்.

திருச்சியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றேன்.கொஞ்சம் மனபிசக்கு ஏற்பட்டதைப் போலத்தான் பேசினார்.அந்த நண்பரின் மனைவியும் எங்களிடம் வருத்தப்பட்டு பேசிக் கொண்டு இருந்தார்.

என் கணவரும்,நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அவர்கள் கண்களுக்குள் ஒரு காதல் அரும்பி இருந்தது.பிரியா விடை பெற்று நாங்கள் சென்னை வந்தோம்.என் கணவருக்கு நண்பரின் மீது காதலும் விடமுடியவில்லை.தன் மனைவியான என்னையும் கைவிட முடியவில்லை.இருதலைக்கொள்ளி எறும்பாக தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு நாள் தோறும் ஒரு ஆணுக்கு ஆண் தப்பாக பழகி இருக்கிறார்கள்.அதுவும் என் கணவர் அந்த தப்பை செய்துவிட்டாரே என்று இரவில் கூட தூக்கம் வராமல்,இதைப்பற்றி வெளியில் கூட பேசி ஆறுதல் அடைய முடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன் என்று அழுதார் அந்தத்தோழி.


அவளது நிலை யாருக்காக இருந்தாலும் மிக வருத்தமளிக்க கூடிய மன அமைதியை குழைக்கக்கூடிய ஒருவிசயம்.

திடிரென எனக்கு ஒரு ஐடியா தோன்றியது.அப்பெண்ணிடம் செக்ஸாலஜி டாக்டர் நாராயண ரெட்டி அவரின் அட்ரஸ் கொடுத்து கவுன்சிலிங் போகச்சொன்னேன்.சரி என்று நம்பிக்கை இல்லாமல் தலையாட்டிவிட்டுச் சென்றார்.

மறு மாதம் அதே ஹாஸ்பிட்டலில் நானும்,அப்பெண்ணும் சந்திக்க நேர்ந்தது.அவளின் முகத்தில் மிகுந்த சந்தோசம்.என்னை வந்து கட்டிக்கொண்டாள்.

நீ கொடுத்த ஐடியாவினால் இன்று நான் சந்தோஷத்துடன் வாழ்கிறேன்.மிக்க நன்றி என்றாள்.

நன்றி எல்லாம் இருக்கட்டும் என்னாச்சு என்று சொல் என்றதும்,
டாக்டர் இருமுறை கவுன்சிலீங் வரசொன்னாங்க சில மாத்திரைகள் கொடுத்தாங்க.அவருக்கு மைண்ட் ரிலாக்ஸ் ஆகுமாறு சில அட்வைஸ் கொடுத்தாங்க.எனக்கு பழைய ஞாபகங்களை கிளப்ப வேண்டாம்,அந்த ஞாபகம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எனக்கும் டாக்டர் அட்வைஸ் பண்ணினார்.

நீங்கள் செய்தது தவறு தான் என்றாலும் அதை மன்னிக்கக்கூடிய தவறுதான். நீங்களே திருந்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பு,நல்ல மனைவி அமைந்திருக்கிறார் எனவே நீங்கள் முன்னிருந்த நட்பை நேசித்தே வாழவேண்டிய அவசியம் இல்லை.அந்த நண்பரும் தான்.எனவே இருவரும் குடும்ப சூழலை மனதில் வைத்து,இருபாலினருக்குள் இருக்கும் உண்மையான உடல் ஆசையைவிட்டுவிட்டு,குடும்பத்துடனும்,அவரவர் மனைவிகளுடன் சந்தோஷமான முறையில் உடல் உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..அதிலில்லாம ஓரினச்சேர்க்கை என்பது நம் நாட்டு கலாச்சாரத்திற்கும்,குடும்ப முறைகளுக்கு ஒத்துவராத விசயம் என்று என் கணவருக்கு புரிய வைத்தார்.

புரிந்து கொண்ட என் கணவர் தன் நண்பரிடமும் இந்த டாக்டர் சொன்ன அட்வைஸ்களைக் கூறி இனி அவரவர் குடும்பம் தான் முக்கியம் என்பதை நீயும் நானும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே இனிமேல் நம் இருவருக்குள் இருக்கும் அந்த நேசம் வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார்.அவர்களின் நெருக்கம் குறைய குறைய எனக்கும் என் கணவருக்குமிடையே அன்னியோன்யம் ஏற்பட்டு மிக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

எல்லாவற்றுக்கும் நீங்க தான் எனக்கு உதவி செய்தாய்.எனவே உன்னைக்காலம் பூராவும் மறக்கமாட்டேன் என்றாள்.

எனக்கு அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையை பார்த்து சந்தோஷப்பட்டேன்.இன்னும் எங்களுக்குள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பழைய நினைப்பை தூக்கி போட்டு இன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.


அடுத்தவாரம் தொடர்வோம்./…….

3 comments:

  1. உங்கள் தளம் - இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...

    http://blogintamil.blogspot.in/2014/02/blog-post.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உண்மையில் உங்கள் தோழியின் கணவர் ஒரு இருபாற்சேர்க்கையுடைய நபர்(Bisexual).அவர்களை மாற்ற முடியும்.ஆனால் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிலருக்கு பிறப்பிலேயே ஓரினச்சேர்க்கையில் நாட்டமுடையவர்களாக இருப்பார்.அவர்களுக்கு எதிர்ப்பால் கவர்ச்சி இருப்பதில்லை.இத்தகையோரை வலிந்து திருமண பந்தத்தில் இணைப்பது கணவன்-மனைவி இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தும்.Bisexualsகளை கலாசாரத்தை சீரழிப்பவர்கள் என்று கூறலாம்.ஆனால் homosexuals பாவப்பட்டவர்கள்.எனக்கும் முதலில் homosexuals என்றாலே எரிச்சல் வரும்.மருத்துவ பீடத்தில் Homosexualityக்கு காரணம் மரபணுக்கள் தான் என்று தெரிந்த போது அவர்கள் மீது பரிதாபம் தோன்றியது.homosexuality என்பது நோயோ கலாச்சார சீர்கேடோ அல்ல எமக்கு எதிர்பால் கவர்ச்சி எப்படியோ அதுபோல் தான் அவர்களுக்கு ஒருபால் கவர்ச்சி இருக்கின்றது.எல்லாம் ஜெனடிக்ஸ் அவ்வளவு தான் .காமவெறிபிடித்தலையும் Bisexuals செய்யும் தவறுகளுக்கு அவர்கள் பலியாக்கப்படுகின்றார்கள் என்பதே உண்மை.நவீன கணனியியலின் தந்தையான அலன் டியுரிங்கை ஓரினச்சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்தால் அவமதித்து தற்கொலைக்கு தூண்டியமைக்காக பிரிட்டிஸ் அரசின் சார்பில் பிரதமர் டேவிட் கமரன் பகிரங்க மன்னிப்புக்கோரியிருந்தார்.

    ReplyDelete